பிரேசில் மருந்து நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தை ரத்து செய்தது பாரத் பயோடெக்
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியைத் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனம் பிரேசில் நாட்டின் இரண்டு மருந்து நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
2 கோடி டோஸ்கள் கோவாக்சினை விநியோகிக்க பிரேசில் அரசுடன் 324 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவாக்சின் விலை நிர்ணயிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக பிரேசில் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை வெடித்தது.
இதையடுத்து உடன்படிக்கையை ரத்து செய்வதாகவும் இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
Comments