வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற புதிய துறையை உருவாக்க தமிழக அரசு திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2809
வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற புதிய துறையை உருவாக்க தமிழக அரசு திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மிழக முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களின் அடிப்படை வசதிகளையும், வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

தலைமைச் செயலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தனி வழிகாட்டுதல் குழு அமைக்க நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தினார்.

முகாம் வாழ் தமிழர்களுக்கு குடியிருப்பு, குடிநீர், கழிவறை வசதி, தெருவிளக்கு மற்றும் மின்வசதி, மாதாந்திர பணக் கொடையை உயர்த்தி வழங்குவது, இலவச எரிவாயு இணைப்பு, திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தலை நிமிரும் தமிழகம் தொலைநோக்குத் திட்டங்களில் அறிவுறுத்தியபடி வெளிநாடு வாழ் தமிழர்களின் அடிப்படை வசதிகள், வாழ்வாதாரத்தை மேப்படுத்த வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை என்ற புதிய துறையை உருவாக்குவது, மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு இணையவழி மூலம் தமிழை கற்பிப்பதற்கு தமிழ் இணையக் கல்விக் கழகம் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments