5 கிலோ வெடிபொருட்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது ; 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
5 கிலோ வெடிபொருட்களுடன் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய டிரோன் ஜம்மு அருகே சுட்டு வீழ்த்தப்பட்டது. ஜம்மு அருகே கனாசக் என்ற இடத்தில் நள்ளிரவு ஒரு மணியளவில் பறந்து வந்த டிரோனை காவல்துறையினர் சுட்டு வீழ்த்தினர்.
அந்த டிரோனில் 5 கிலோ வெடிபொருட்கள் இருந்தது தெரியவந்தது. இந்த டிரோன் 10 முதல் 12 கிலோ வரையிலான எடை கொண்ட பொருட்களுடன், 20 கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கும் திறன் கொண்டது என்று ஜம்மு ஏடிஜிபி முகேஷ் சிங் கூறினார். இதனிடையே, பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Comments