இந்திய எல்லைக்கு அருகில் அமைந்திருக்கும் சீன ரயில் நிலையம் ; நேரில் பார்வையிட்டார் அதிபர் ஜின்பிங்
திபெத்(Tibet)தலைநகர் லாஸாவையும் (Lhasa) நியிங்ச்சி( Nyingchi) நகரையும் இணைக்கும் முதல் மின்சார ரயில் பாதை திட்டத்தை சீனா கட்டி முடித்துள்ளது.
சென்ற மாதம் முடிக்கப்பட்ட இந்த 435 கிலோமீட்டர் நீள ரயில் தடத்தில் இயக்கப்படும் ரயில்களை சீன அதிபர் ஜின்பிங் நேற்று பார்வையிட்டார்.கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில், கரடுமுரடான மலைப் பிரதேசத்தில் செல்லும் இந்த ரயில்பாதையை கட்டி முடிக்க 6 ஆண்டுகள் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்திற்கு மிக அருகில் இருக்கும் நியிங்ச்சி நகர ரயில் நிலையம் சீனாவின் எல்லையோர உள்கட்டமைப்பு வளர்ச்சி திட்டத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது.
Comments