கையில் வாரண்ட் வைத்திருக்காவிட்டால் அரசு பேருந்தில் காவலர்கள் இலவசமாகப் பயணிக்கக் கூடாது - டிஜிபி சைலேந்திர பாபு
கையில் வாரண்ட் வைத்திருக்காவிட்டால், காவலர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கக் கூடாது என டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முறையான ஆவணங்கள் இன்றிப் பயணிக்கும் சில காவலர்கள், அரசுப் பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்திலும் தகராறிலும் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.
2019 ல் திருச்சியில் இதே போன்ற சம்பவத்தில், மன உளைச்சல் ஏற்பட்ட நடத்துநர் கோபிநாத் என்பவர் நெஞ்சுவலி காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழக டிஜிபி விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த வழக்கின் அடிப்படையில், டிஜிபி, அனைத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும் காவலர்களின் இலவச அரசுப் பேருந்துப் பயணம் குறித்த இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Comments