பட்டப்பகலில் சுவர் ஏறி குதித்து மூதாட்டியிடம் செயின் பறிக்க முயன்ற மர்ம நபர்

0 2654
மதுரை மேலூரில் பட்டப்பகலில் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி வலுக்கட்டாயமாக செயின் பறிக்க முயன்ற பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மதுரை மேலூரில் பட்டப்பகலில் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், மூதாட்டியிடம் கத்தியைக் காட்டி வலுக்கட்டாயமாக செயின் பறிக்க முயன்ற பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

பிஸ்மில்லா நகரைச் சேர்ந்த அமீனா பீவி என்ற அந்த மூதாட்டி தனது மகள், மருமகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது, பேண்ட், டீசர்டு அணிந்து கொண்டு டிப் டாப்பாக வந்த மர்ம நபர் ஒருவன், பின்பக்க சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் புகுந்தான்.

சத்தம் கேட்டு அறைக்குள் இருந்த மூதாட்டி எழுந்து வெளியே வரவே, அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செயினை பறிக்க முயன்றான்.

செயினை விடாமல் கட்டியாக பிடித்துக் கொண்ட மூதாட்டியை தாக்கத் தொடங்கிய அவன், வீட்டிலுள்ளவர்கள் வந்ததால் செயின் பறிக்கும் முயற்சியை அப்படியே கைவிட்டுவிட்டு தப்பியோடினான்.

காயமடைந்த அமினா பீவி, சிகிச்சைக்காக மேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments