அடுத்த 5 மாதத்தில் 135 கோடி டோஸ் தடுப்பு மருந்துகள் கிடைக்கச் செய்யப்படும் - மத்திய அரசு
ஆகஸ்டு முதல் டிசம்பர் வரையான காலத்தில் மொத்தம் 135 கோடி டோஸ் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கச் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஜனவரி 16ஆம் நாள் முதல் கொரோனா தடுப்பூசி இயக்கம் தொடங்கியது. 6 மாதக் காலத்தில் மொத்தம் 42 கோடியே 34 இலட்சத்து 17ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் மக்களவையில் உறுப்பினரின் வினாவுக்குப் பதிலளித்த நலவாழ்வுத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார், ஆகஸ்டு முதல் டிசம்பர் வரையான காலத்தில் 135 கோடி டோஸ் தடுப்பு மருந்து கிடைக்கச் செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
Comments