காருக்கு டீசல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காமல் தகராறு-அதிமுக நிர்வாகிகள் எனக் கூறி பங்க் ஊழியரை மிரட்டிய கும்பல்

0 2988

சென்னையில் காருக்கு டீசல் நிரப்பிய நபர்கள் பணம் கொடுக்காமல் ஆபாசமாக பேசியதோடு, தாங்கள் அதிமுக நிர்வாகிகள் எனக் கூறி பங்க் ஊழியரை கத்தியைக் காட்டி மிரட்டிச் சென்றதாக கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நெசப்பாக்கத்திலுள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கிற்கு அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த இன்னோவா காரில் குடிபோதையில் வந்த 4 பேர், ஆயிரம் ரூபாய்க்கு டீசல் நிரப்பியுள்ளனர். டீசலுக்கான தொகையை கூகுள் பேயில் செலுத்துவதாக கூறிவிட்டு, அவர்கள் செலுத்தவில்லை. இதனால் பணமாக கையில் தருமாறு பங்க் ஊழியர் கேட்டுள்ளார்.

அதற்கு தாங்கள் அதிமுக நிர்வாகிகள் எனக் கூறி ஆபாசமாக பேசி கத்தியைக் காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

பங்க் ஊழியருக்கு ஆதரவாக சில வாடிக்கையாளர்களும் அங்கு வரவே, வழியில் நின்றிருந்தவர் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்துவிட்டு 4 பேரும் தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது

விசாரணையில் அந்த கார் சிவகங்கை மாவட்ட பதிவு எண் கொண்டது என தெரியவந்ததை அடுத்து அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments