டிரோன் எதிர்ப்பு உபகரணம்- இனி எல்லையில் சோதனை நடக்கும்..!

0 3272

ர்நாடக மாநிலம் கோலாரில் சோதித்துப் பார்க்கப்பட்ட டிரோன் எதிர்ப்பு உபகரணத்தின் புரோட்டோடைப்பை, களச்சூழலில் சோதித்து பார்ப்பதற்காக, ஜம்மு மற்றும் பஞ்சாப் எல்லைக்கு கொண்டு வருமாறு டிஆர்டிஓவிடம் BSF கேட்டுக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் இஸ்லாமிய மற்றும் காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள், ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் உள்ள தங்களது தீவிரவாத தொடர்புகளுக்கு ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் கடத்துவதற்கும், குண்டு வீசி தாக்குதல் நடத்தவும் ஆளில்லா டிரோன்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம் 27 ஆம் தேதி ஜம்முவில் உள்ள விமானப்படைத் தளத்தில் 2 டிரோன்கள் மூலம் பாகிஸ்தானில் உள்ள லஷ்கரே தொய்பா தீவிரவாதிகள் இரண்டு குண்டுகளை வீசினர். இந்த நிலையில், கர்நாடக மாநிலம் கோலாரில் டிஆர்டிஓவின் டிரோன் எதிர்ப்பு உபகரண புரோட்டோடைப் சோதித்து பார்க்கப்பட்டது. அப்போது அங்கிருந்த கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் அது சிறப்பாக செயல்பட்டதாக அதை பார்த்த பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4 கிலோ மீட்டர் தூரம் வரையிலான ரேடார் கண்காணிப்பு திறன், 2 கிலோ மீட்டருக்குள் எதிரி டிரோன்களை தடுக்கும் திறன், ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்குள் அவற்றை அழிக்கும் திறன் ஆகியனவும் அதற்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, பிரதமர் மோடியின் பயண வாகன அணிவகுப்புடன், சோதித்துப் பார்க்கப்பட்ட இந்த டிரோன் எதிர்ப்பு உபகரணமும் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் அதனை எல்லைக்கு அவசரமாக கொண்டு வருமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments