பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டில் திருப்தி இல்லாத மாணவர்களுக்கான சிறப்புத் தேர்வு..! ஆன்லைன் விண்ணப்பதிவு இன்று முதல் துவங்கியது

0 2970

பிளஸ் டூ மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகள் வருகிற 6-ந் தேதி தொடங்கும் நிலையில், அதற்கான விண்ணப்பதிவு தொடங்கியுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட பிளஸ் டூ மாணவர்களுக்கான முடிவுகளில் மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு துணைத் தேர்வு நடத்தப்படவுள்ளது.

ஆகஸ்ட் 6-ந் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ள துணை தேர்வுக்கான விண்ணப்ப பதிவு இன்று துவங்கியது. மாவட்டங்களில் உள்ள சேவை மையங்களில், வருகிற 27-ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த கால அவகாசத்தை தவறவிட்டோர் 28-ஆம் தேதி தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவல்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments