எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை திட்டம் என தகவல்
சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, தொழில் நிறுவனங்கள் உள்பட அவர் தொடர்புடைய 26 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், கணக்கில் வராத 25 லட்சம் ரொக்கமும்,சொத்து மற்றும் பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும், சிக்கியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்து விசாரிக்க எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
அத்தோடு, சொத்து குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் குடும்பத்தினருக்கும் சம்மன் அனுப்பவும், அவர்கள் பெயரிலுள்ள வங்கிக் கணக்குகள், லாக்கரில் இருக்கக்கூடிய பொருட்களையும் ஆய்வு செய்யவும் லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.
Comments