சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடைகளில் அமரக் கூடாது-அமைச்சர்

0 4150
சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடைகளில் அமரக் கூடாது என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவு அலுவலர்கள் இனி உயர்ந்த மேடைகளில் அமரக் கூடாது என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்த செய்திக் குறிப்பில், பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமர்ந்து பதிவுப்பணி செய்து வருவதால், பொதுமக்களை மரியாதையுடன் நடத்தி அவர்களுக்கு சேவையை வழங்குவது சிரமமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால் இனிவரும் காலங்களில் பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமராமல் சரிசமமாக அமர்ந்து பதிவு பணியை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

கட்டணங்கள் இணைய வழியாகவே செலுத்தப்படுவதாலும், சார்பதிவாளர்கள் பணத்தைக் கையாள வேண்டிய அவசியமில்லாததாலும், பதிவு அலுவலர்களின் இருக்கையினை சமதளத்தில் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments