பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் 100 சதவீத அந்நிய முதலீடுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

0 3329
பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் 100 சதவீத அந்நிய முதலீடுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் அந்நிய நேரடி முதலீடு உச்சவரம்பை 49 சதவீதத்தில் இருந்து 100 சதமாக அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

எஃகு உற்பத்தியை ஊக்குவிக்க 6 ஆயிரத்து 322 கோடி ரூபாய் நிதியை ஒதுக்க பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஊக்கம் சார் உற்பத்திக்கு ஒதுக்கப்படும் இத்தொகையால் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

லடாக்கில் வேலைவாய்ப்பை உருவாக்கவும் வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஆலோசித்து வருவதாக பிரதமர் மோடி தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளர்.லடாக்கில் மத்தியப் பல்கலைக்கழகம் அமைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments