ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 2,000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி -வேதாந்தா நிறுவனம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 2 ஆயிரம் மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையில் மே பதிமூன்றாம் தேதி முதல் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. இங்கு உற்பத்தி ஆகும் ஆக்சிஜன் 32 மாவட்டங்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
ஆக்சிஜன் விநியோகம் தொடர்பானத் தகவல்கள் மத்திய அரசின் டிஜிட்டல் ஆக்சிஜன் கண்காணிப்பு அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதால் தேவையானப் பகுதிகளுக்கு உடனுக்குடன் ஆக்சிஜன் அனுப்பப்படுவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா காலத்தில் ஆக்சிஜன் விநியோகத்தை சாத்தியப்படுத்தியதற்காக தமிழக அரசுக்கும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்துக்கும், மருத்துவ முன்களப் பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளது.
Comments