கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்கள் அலுவலகத்தில் அதிரடி சோதனை; கம்ப்யூட்டர்கள், முக்கிய ஆவணங்கள் சிக்கின?

0 4847

கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் நடத்தி வந்த ஹெலிகாப்டர் நிறுவன அலுவலகம் மற்றும் நிதி நிறுவனங்களில் காவல்துறையினர் நள்ளிரவில் நடத்திய அதிரடி சோதனையில் கம்ப்யூட்டர்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கும்பகோணத்தில் பல கோடி ரூபாய் மோசடி தொடர்பாக ஹெலிகாப்டர்கள் சகோதரர்கள் கணேஷ், சுவாமிநாதன் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இருவரும் தற்போது தலைமறைவாக இருப்பதால் அவர்களை பிடிக்கும் பணியினை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் கும்பகோணம் காந்திநகரில் இருவரும் நடத்திவந்த விக்டரி பைனான்ஸ் மற்றும் ஹெலிகாப்டர் நிறுவனங்களில் நள்ளிரவில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது பல முக்கிய ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர்களை கைப்பற்றிய போலீசார் அவற்றை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments