கனடாவை சேர்ந்த நபர் உலகின் அதிநவீன பிரகாசமிக்க டார்ச் லைட்டை உருவாக்கி அசத்தல்..!

0 4328

னடாவை சேர்ந்த James Hobson என்பவர் உலகின் அதிபிரகாசமான டார்ச் லைட்டை உருவாக்கி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

Hacksmith என்ற நிறுவனத்தை சேர்ந்த James Hobson, Nitebrite 300 என்ற பெயரில் 300 எல்.இ.டி. பல்புகளை கொண்டு அதிநவீன மற்றும் அதி பிரகாசமிக்க டார்ச் லைட்டை உருவாக்கி உள்ளார்.

300 எல்.இ.டி. பல்புகளை கொண்டு எரியவிடப்பட்ட டார்ச் லைட் 5 லட்சத்து ஆயிரத்து 31 லியூமன்ஸ் அளவில் பிரகாசித்து அதிக வெளிச்சத்தை வெளிப்படுத்தியது. தனித் தனி போர்ட்டுகளில் 6 எல்.இ.டி. பல்புகளை பொருத்தி, மொத்தம் 50 போர்ட்களில் 300 எல்.இ.டி. பல்புகளை பொருத்தி ஒரே பேட்டரி இணைப்பின் மூலம் ராட்சத டார்ச் லைட்டை உருவாக்கி உள்ளனர்.

சூரிய ஒளியை கொண்டு காகிதங்களை எரியூட்ட எடுக்கும் நேரத்தை காட்டிலும் பன்மடங்கு இந்த டார்ச் லைட் மூலம் அதிவேகத்தில் தீயை உண்டாக்கும் சக்தி கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments