நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை எதிரொலி; பில்லூர் அணை நிரம்பி பவானி ஆற்றில் 8 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்

0 2466

நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்த பில்லூர் அணை நிரம்பி பவானி ஆற்றில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

தென் மேற்கு மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 16 ஆயிரத்து 600 கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக 100 அடி கொள்ளளவு பில்லூர் அணை விறுவிறுவென நிறைந்து 97 அடியை எட்டியது.

இதையடுத்து பில்லூர் அணையின் 4 மதகுகளில் இருந்து 8 ஆயிரம் கன அடி பவானி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, வச்சினம்பாளையம் உள்ளிட்ட கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments