WHO புதிய விசாரணைக்கு சீனா மறுப்பு தெரிவித்திருப்பதற்கு அமெரிக்கா கண்டனம்..!

0 3889

கொரோனா வைரஸ் தோன்றியது தொடர்பான உலக சுகாதார அமைப்பின் புதிய விசாரணைக்கு சீனா மறுப்பு தெரிவித்திருப்பதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் ஜென் சாகி, சீனாவின் மறுப்பு மிகுந்த ஏமாற்றத்தையளித்திருப்பதாகக் கூறினார்.

பொறுப்பற்ற பகிரங்கமான ஆபத்தான நிலைப்பாட்டை சீனா எடுப்பதாக சாடிய அவர், சீனாவிடம் கொரோனா தொடர்பான ஆவணங்களையும் ஆய்வுக்கூடத்தின் சாம்பிள்களையும் கேட்டு மற்ற உலக நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தும் என்று தெரிவித்தார்.

அடுத்து ஒரு பேரிடர் வருவதைத் தடுக்க இது மிகவும் தீவிரமானது என்றும் அவர் தெரிவித்தார். வூகான் ஆய்வுக் கூட விவகாரத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் நடந்துக் கொள்ளவில்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments