தப்பியோடும் போது கால்வாய்க்குள் விழுந்த ரவுடி.. பத்திரமாக மீட்டு சிறைக்கு அனுப்பிய போலீசார்..!

0 3813

சென்னையில் போலீசாரிடம் இருந்து தப்பியோடும் முயற்சியில் கழிவுநீர் கால்வாய்க்குள் விழுந்து சிக்கிக் கொண்ட ரவுடியை, போலீசாரே பத்திரமாக மீட்டு சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் என்ற ரவுடி மீது செம்பியம், எம்.கே.பி.நகர் காவல் நிலையங்களில் கொலை, அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தலைமறைவாகியிருந்த புவனேஸ்வரனை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், வியாசபாடியில் சுற்றித்திரிந்த அவன் போலீசாரை கண்டதும் தப்பியோட முயற்சித்து, கால்வாயில் குதித்து சிக்கிக் கொண்டான். இருப்பினும், போலீசார் அவனை பத்திரமாக மீட்டு கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments