புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்

0 2498

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் நாடாளுமன்றம் அருகே ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

மழைக்காலக் கூட்டத்தொடர் முடியும் வரை ஜந்தர் மந்தரில் நாள்தோறும் மாலை ஐந்து மணி வரை நடைபெறும் போராட்டத்தில் 206 பேருக்கு மிகாமல் பங்கேற்க டெல்லிக் காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

சிங்குவில் இருந்து பேருந்துகளிலும், கார்களிலும் வந்த விவசாயிகள் ஜந்தர் மந்தரில் உழவர் நாடாளுமன்றத்தைக் கூட்டினர். அவைத் தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்களைக் கொண்டு நாடாளுமன்ற அவைகளைப் போலவே விவாதமும் நடைபெற்றது.

விவசாயிகளின் பிரச்சனைகளை அந்தந்தத் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் எதிரொலிப்பதில்லை என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments