தொடரும் போதைப்பொருள் மாஃபியாக்களின் அராஜகம் - தற்காத்துக் கொள்ள துப்பாக்கி ஏந்திய சமூகம்
போதைப்பொருள் மாஃபியாக்களின் அட்டூழியத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மெக்சிகோவின் சிறிய பூர்வகுடி சமூகம் ஒன்று கையில் ஆயுதம் ஏந்தி உள்ளது.
தெற்கு மெக்சிகோவின் செனாலொ (Chenalo) , பேன்ட்டெலொ(Pantelho) உள்ளிட்ட பகுதிகளில் போதைப்பொருள் மாஃபியாக்களின் அராஜகம் தலைவிரித்தாடுகிறது.
பத்தாண்டுகளுக்கும் மேலாக போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட மோதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர்.
அரசுத் தரப்பிலிருந்து பொதுமக்களுக்கு எந்தவொரு பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ள உள்ளூர் சமூகம் ஒன்று,எல் மச்செட் (El Machete) என்ற சுய பாதுகாப்ப குழுவை உருவாக்கி, மக்களை காக்க துப்பாக்கி ஏந்தி உள்ளது.
Comments