கொசுவை விரட்ட போட்ட புகை மூட்டம்: 11 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழப்பு

0 5516
கொசுவை விரட்ட போட்ட புகை மூட்டம்: மூச்சுத்திணறி பெண் உயிரிழப்பு?

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில், வீட்டில் கொசுவை விரட்ட போடப்பட்ட புகையால், மூச்சுத்திணறி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

சொக்கலிங்கம் - புஷ்பலட்சுமி தம்பதி, அவர்களுடைய மகள் மல்லிகா, பேரன் விஷால் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். புதனன்று இரவு தூங்கச் சென்ற 4 பேரும், வழக்கம்போல் கொசுவை விரட்ட ஒரு தட்டில் அடுப்புக்கரியை வைத்து வேப்பிலை, வேப்பங்குச்சி ஆகியவற்றை பயன்படுத்தி புகை மூட்டம் போட்டுள்ளனர். அதே போல் வீட்டின் சமையலறையில் அடுப்பில் எண்ணெய் டின்னில் கரியை போட்டு எரித்து கொசுவை விரட்ட முயற்சித்துள்ளனர்.

ஏ.சி.யையும் போட்டு விட்டு ஜன்னல்களையும் அடைத்ததால் வீடு முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்த நிலையில், அதனை சுவாசித்த 4 பேரும் மயங்கியதாக கூறப்படுகிறது. அக்கம்பக்கத்தினர் காலையில் பூட்டை உடைத்து உள்ளே சென்று மீட்டு 4 பேரையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

சொக்கலிங்கத்தின் மனைவி புஷ்பலதா, ஏற்கனவே உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த அவரது பேரன் விஷாலும் பரிதாபமாக பலியானான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments