பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவுவது அரிது - டெல்லி எய்ம்ஸ் இயக்குநர்
பறவைக் காய்ச்சல் நோய் மனிதர்களுக்குப் பரவுவது அரிது என்பதால் அதைப்பற்றி அஞ்சத் தேவையில்லை என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
அரியானாவைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன் பறவைக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாயன்று உயிரிழந்தான்.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா, பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு வைரஸ் பரவுவது மிகவும் அரிது என்றும், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பறவைக் காய்ச்சல் பரவுவதாக இன்னும் மெய்ப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
ஆனாலும் கோழிப்பண்ணைகளில் பணிபுரிவோர் தனிப்பட்ட தூய்மையைப் பேணுவதுடன் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Comments