Burpee தண்டால் முறையில் பிரேசில் வீரர் கின்னஸ் சாதனை

0 3763

பிரேசிலை சேர்ந்த எம்.எம்.ஏ. விளையாட்டு வீரர் ஒருவர் burpee என்ற தண்டால் முறை விளையாட்டில் ஒரு மணி நேரத்தில் 951 முறை செய்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

மிக்ஸ்டு மார்சியல் ஆர்ட்ஸ் எனப்படும் எம்.எம்.ஏ விளையாட்டை சேர்ந்த பிரேசில் வீரர் Cassiano Rodrigues Laureano, burpee எனப்படும் தண்டால் வகை உடற்பயிற்சியை கடந்த 2 ஆண்டுகளாக பயின்று வந்துள்ளார். இந்த நிலையில் அந்த விளையாட்டில் கின்னஸ் சாதனை படைக்க முயன்ற அவர் ஒரு மணி நேரத்தில் 951 முறை burpee-ஐ செய்து காட்டி சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

தன் மருமகளுக்கு ஏற்பட்டு உள்ள இருதய நோய்க்கு சிகிச்சை அளிக்க நிதி திரட்ட இப்போட்டியில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments