ஆட்டம் முடிந்துவிட்டதாக எண்ண வேண்டாம் தாலிபன் படைகளுக்கு அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி எச்சரிக்கை

0 3267
ஆட்டம் முடிந்துவிட்டதாக எண்ண வேண்டாம் தாலிபன் படைகளுக்கு அமெரிக்க ராணுவ உயர் அதிகாரி எச்சரிக்கை

ப்கானிஸ்தானில் தாலிபன் படைகள் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி வரும் நிலையில் அமெரிக்க ராணுவ கூட்டுப் படைகளின் தலைவர் மார்க் மில்லே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆட்டம் முடிந்துவிட்டதாக தாலிபன்கள் கருத வேண்டாம் என்று அவர் கூறினார். 212 மாவட்டங்களைக் கைப்பற்றி விட்டதாக தாலிபன் பிரச்சாரம் செய்து வருகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  மார்க் மில்லே, மொத்தம் உள்ள 419 மாவட்டங்களில் பாதியைத் தான் தாலிபன் கைப்பற்றியது என்றும் 34 மாகாணத் தலைநகர்களில் ஒன்று கூட தாலிபன் வசம் இல்லை எனஅறும் அவர் சுட்டிக் காட்டினார்.

பக்ரீத்தை முன்னிட்டு வன்முறைகள் தணிந்திருப்பதாகவும் அமைதிக்கான பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments