நாளை தொடங்குகிறது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி

0 3354
நாளை தொடங்குகிறது டோக்கியோ ஒலிம்பிக் போட்டி

32-வது ஒலிம்பிக் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் ஒட்டுமொத்த விளையாட்டு உலகமே, இந்த நாளுக்காக கடந்த 5 ஆண்டுகள் காத்திருந்தது.

வீரர்-வீராங்கனைகளில் புத்தம் புதிய சாதனைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஒலிம்பிக் போட்டி

கொரோனா அச்சுறுத்தல் இருந்தாலும், ஏராளமான கட்டுப்பாடுகளுடன் நிசப்த நிகழ்வாக நடத்த ஒலிம்பிக் அமைப்புக் குழு ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்தபிரமாண்ட விளையாட்டுப் போட்டி நாளை தொடங்கி ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

205 நாடுகளைச் சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும், 339 உட்பிரிவுகளுடன் 33 விளையாட்டுகள் நடைபெற உள்ளதாகவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.

கராத்தே, அலை சறுக்கு, செங்குத்தான பாறைகளில் ஏறும் விளையாட்டான ஸ்போர்ட் க்ளைம்பிங் மற்றும் ஸ்கேட்போர்டிங் உள்ளிட்ட விளையாட்டுக்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. நடப்பு தொடரில் உலக சமத்துவம் காரணமாக எந்த விளையாட்டும் ரத்து செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நடப்பு ஒலிம்பிக் தொடரில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளவில்லை. அதிகபட்சமாக டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ், சிமோனா ஹாலப், ஸ்டான் வாவ்ரிங்கா உள்ளிட்ட 16 பேர் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளனர்.

கால்பந்து வீரர்களான நெய்மர், Kylian Mbappe, 800 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை படைத்த கென்ய வீரர் David Rudisha என 45-க்கும் மேற்பட்ட முன்னணி வீரர்கள் தொடரில் இருந்து விலகியுள்ளனர். காயம் காரணமாக சிலர் பங்கேற்காத நிலையில், கொரோனா பீதி காரணமாகவே வீரர்-வீராங்கனைகள் பலர் போட்டியை தவிர்த்துவிட்டனர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய ரஷ்யா நடப்பு ஒலிம்பிக் தொடரில் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில் அந்நாட்டு வீரர்கள் ஒலிம்பிக் பொதுக் கொடியில் கலந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

1964 ஆம் ஆண்டுக்கு பின் ஜப்பான் 2-வது முறையாக ஒலிம்பிக் போட்டியை நடத்த உள்ளதால், தொடரை நேரடியாக காண கடந்த ஆண்டே போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்கிக் குவித்து விட்டனர். தற்போது ரசிகர்களின்றி மூடிய அரங்கில் போட்டிகள் நடைபெறுவது ஜப்பான் மட்டுமின்றி உலக நாடுகளின் விளையாட்டு ரசிகர்கள் அனைவருக்குமே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

எது எப்படியோ, நெருக்கடியான இந்த சூழலிலும் வீரர்-வீராங்கனைகள் புதிய புதிய சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதே உலகெங்கும் உள்ள விளையாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments