எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு... சிக்கியது என்ன?

0 7843
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு... சிக்கியது என்ன?

ருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட 24 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். இவரது பதவி காலத்தில் பல்வேறு முறைகேடுகள் மூலமாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்த புகார்கள் குறித்து ரகசிய விசாரணை நடத்தி வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, சென்னையில் ஆர்.ஏ.புரம் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை நடைபெற்றது. கரூரில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் காலை முதலே லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

கரூர் செல்வநகரிலுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அவரது தாய் வீடு, அவருக்கு சொந்தமானதாக கூறப்படும் சாயப்பட்டறை, அட்டை தயாரிப்பு கம்பெனி ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

பரமத்தியிலுள்ள கல்குவாரி, மில்கேட்டிலுள்ள தறி பட்டறையிலும் சோதனை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்களான சுப்பிரமணி, ரமேஷ், கார்த்தி ஆகியோரது வீடுகளிலும் ரெய்டு நடத்தி வருகின்றனர். ரெய்டு நடப்பதை அறிந்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டுக்கு முன் அவரது ஆதரவாளர்கள் குவிந்ததனர்.

இதனையடுத்து, அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments