கர்நாடகாவில் வரும் 26 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்
கர்நாடகாவில் வரும் 26 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேரடி வகுப்புகளில் மாணவர்கள் விரும்பினால் கலந்து கொள்ளலாம் என்றும், கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என விதிமுறைகள் இல்லை எனவும் தெரிவித்தார்.
அதேநேரம் ஆன்லைன் வகுப்புகளும் வழக்கம் போல் நடைபெறும் என தெரிவித்தார். மேலும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் கட்டாயம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். தற்போது வரை கர்நாடகாவில் 75 சதவீத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
Comments