"பில்டப் சாமியாரை" போட்டுக்கொடுத்த போன் கால்
தமிழகத்தில் என்கவுண்டர் செய்ய உள்ள ரவுடிகளின் பட்டியல் தனக்குக் கிடைத்திருப்பதாக வழக்கறிஞர் ஒருவரிடம் போனில் பேசிய திருச்சியைச் சேர்ந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி அல்லித்துறையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், கரூர் மாவட்டம், குளித்தலை தாலுக்கா, ஒத்தக்கடையில் தக்ஷிண காளி என்ற கோவிலைக் கட்டி, அங்கு வரும் பக்தர்களுக்கு குறிசொல்லி வருகிறார்.
அவரிடம் வழக்கறிஞர் ஒருவர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
அந்த ஆடியோவில் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் தமிழகம் முழுவதும் 42 ரவுடிகள் என்கவுண்டர் லிஸ்டில் உள்ளதாகவும் கூறுகிறார் பாலசுப்பிரமணியம்.
அவரின் பில்டப் ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவ, சாமியார், அவருடன் பேசியதாகக் கூறப்படும் வழக்கறிஞர் கார்த்திக், சாமியார் ஆடியோவில் குறிப்பிட்ட ரவுடி ஜெய் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments