பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நாளை பதவியேற்பு
பஞ்சாப் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நவ்ஜோத் சித்து நாளை பதவியேற்கிறார்.
இவ்விழாவுக்கு அவர் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கிற்கும் அழைப்பு விடுத்துள்ளார். சித்துவை சந்திக்க மறுத்த அமரிந்தர் சிங், டிவிட்டரில் தம்மை தாக்கி சித்து வெளியிட்ட கருத்துகளுக்கு பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால் மன்னிப்புக் கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்று மறுத்துவிட்ட சித்து, அமரிந்தரை சந்திக்கும் எண்ணமில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் பஞ்சாப் அரசியலில் உட்கட்சிப் பூசல் உச்சத்தை எட்டியது.
தமக்கு 65 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதைத் தெரியப்படுத்தும் வகையில், அவர்களின் கையெழுத்துடன் அமரிந்தர்சிங்கிற்கு பதவியேற்பு விழா அழைப்பிதழை சித்து அனுப்பி வைத்துள்ளார். நேற்று 62 எம்.எல்.ஏக்கள் புடை சூழ, பொற்கோவிலுக்குச் சென்று அவர் வழிபாடு செய்தார்.
Comments