பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகை

0 4005
பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வருகை

பிரான்சில் இருந்து 7வது கட்டமாக மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்தன. ரபேல் போர் விமானங்களுக்கு நடுவானில் எரிபொருள் நிரப்ப, ஐக்கிய அரபு அமீரகத்தின் போர் விமானங்கள் உதவி செய்துள்ளன.

சுமார் 7 ஆயிரம் கிலோ மீட்டர் இடையில் எங்கும் இறங்காமல் நேரடியாக இந்தியா வந்து சேர்ந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. நடப்பு ஆண்டுக்குள் அனைத்து விமானங்களையும் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments