ஹஜ் புனிதயாத்திரையின் போது மெக்கா மசூதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள பெண் ராணுவத்தினர்
மெக்கா மசூதியில் முதல் முறையாகப் பெண்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு சமூக சீர்திருத்தங்களை அறிமுகப் படுத்தினார்.
17 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஓட்டுநர் உரிமை, 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குடும்பத்தினர் கட்டுப்பாடின்றி வெளிநாடு செல்ல அனுமதி உள்ளிட்ட பல சட்டத் திருத்தங்களை அமல் படுத்தினார்.
அதன் ஒரு பகுதியாக ஹஜ் புனிதயாத்திரையின் போது மெக்கா மசூதியில், ராணுவத்தில் பணியாற்றும் பெண்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Comments