முறை கேடாக நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் சல்மான் குர்ஷித் மனைவிக்கு ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்
அறக்கட்டளைக்கு மத்திய அரசிடம் இருந்து முறை கேடாக நிதி பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் மனைவிக்கு, ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
ஜாகீர் உசேன் நினைவு அறக்கட்டளையை நடத்தி வரும் லூயிஸ் குர்ஷித், உத்தரபிரதேச மாநிலத்தின் 17 மாவட்டங்களில் உடல் ஊனமுற்றோருக்கு 3 சக்கர வாகனம் உள்ளிட்டவைகளை வழங்க, 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அரசிடம் இருந்து 71 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மானியம் பெற்றிருந்தார்.
இவ்வழக்கு, Farukkhabad நீதிமன்றத்தில் நீதிபதி பர்வீன்குமார் தியாகி முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. லூயிஸ் குர்ஷித்துக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்டு 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Comments