படப்பிடிப்பில் சண்டை காட்சியின் போது நடிகர் விஷால் காயம்

0 4163
படப்பிடிப்பில் சண்டை காட்சியின் போது நடிகர் விஷால் காயம்

படப்பிடிப்பில் சண்டைக் காட்சியை படமாக்கிய போது ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஷால் காயமடைந்தார்.

நடிகர் விஷாலின் 31வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கிளைமாக்ஸ் காட்சிக்காக விஷால் மற்றும் மலையாள நடிகர் பாபு ராஜ் இடையேயான சண்டை காட்சி படமாக்கப்பட்ட போது விஷாலுக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த சண்டை காட்சிகள் தொடர்பான வீடியோ வெளியான நிலையில், விஷாலுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments