கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் நீர்மட்டம் அதிகரிப்பு
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் நீர்மட்டம் நூறு அடியை எட்டியுள்ளது.
குடகு மாவட்டத்தில் பாகமண்டலா, தலைக்காவிரி பகுதிகளில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் காவிரியில் நீர்வரத்து 12ஆயிரத்து 581 அடியாக அதிகரித்தது.
124 புள்ளி 8 அடி உயரமுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் நீர்மட்டம் நூறு அடியை எட்டியுள்ளது. அணையில் இருந்து இரண்டாயிரத்து 178 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கபினி அணையில் இருந்து எட்டாயிரத்து 750 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நேற்று நீர்வரத்து 16 ஆயிரத்து 301கன அடியாக இருந்தது. இன்று காலை நீர்வரத்து 14 ஆயிரத்து 514 கன அடியாகக் குறைந்தது.
Comments