பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

0 3140
பாகிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 3ஆவது டி20 போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

மான்செஸ்டரில் நடந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணியில், தொடக்க ஆட்டக்காரரான ஜேசன் ராய், அதிரடியாக 64 ரன்கள் சேர்த்தார். இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து இலக்கை எட்டிய இங்கிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

ஏற்கனவே ஒருநாள் தொடரிலும் பாகிஸ்தானை இங்கிலாந்து ஒயிட்வாஷ் செய்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments