அடுத்த வாரம் இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் வரும் 27-28 தேதிகளில் இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகிறார்.
டெல்லியில் அவர் பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். கடந்த ஓராண்டில் ஜெய்சங்கரை மூன்று முறை பிளிங்கென் சந்தித்துப் பேசியுள்ளார். ஏற்கனவே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் இந்தியா வந்த நிலையில் டெல்லி வரும் 2வது அமெரிக்க அமைச்சர் பிளிங்கென் ஆவார்.
இந்தியா கொரோனா 2வது அலையுடன் போராடிக் கொண்டிருந்த போது தடுப்பூசி தயாரிப்புக்கான மூலப்பொருட்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா அனுப்பிவைத்தது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சீனா, ஆப்கான் பிரச்சினைகள் அமெரிக்க அமைச்சரின் வருகையின் போது விவாதத்தில் முக்கிய இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Comments