1000 கி.மீ தூரத்தை இரண்டரை மணி நேரத்தில் கடக்கும் அதிவேக ரயில்… சீனாவில் அறிமுகம்
உலகிலேயே அதி வேகமாகச் செல்லும் ரயிலை சொந்தமாகத் தயாரித்து சீனா அறிமுகம் செய்துள்ளது.
மின்காந்த சக்தியின் அடிப்படையில் இயங்கும் இந்த ரயில் அதிகபட்சம் மணிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. கடற்கரை நகரமான கிங்டாவ் என்ற இடத்தில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் உச்சபட்ச வேகத்தில் செல்லும் போது தண்டவாளத்தில் இருந்து மேலெழும்பி செல்லும் திறன் கொண்டது.
தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து ஷாங்காய் நகருக்கு கிட்டத்தட்ட ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை இந்த ரயில் மூலம் இரண்டரை மணி நேரத்தில் செல்ல முடியும். இதே தூரத்தை விமானத்தில் செல்ல 3 மணி நேரம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments