உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப்போடும் எண்ணம் இல்லை - அமைச்சர் பெரிய கருப்பன்

0 2077

உள்ளாட்சித் தேர்தலைத் தள்ளிப் போடும் எண்ணம் அரசுக்கு இல்லை என அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியப் பகுதிகளில் நடந்து வரும் ஊரக வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் பெரிய கருப்பன் பார்வையிட்டார். பின்னர் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இனிவரும் காலங்களில் கட்டுமான பொருள்கள் உயர்வு இருக்காது என்று கூறினார். மேலும் கட்டுமானப் பொருள்களின் அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments