சுதந்திர தினத்திற்கு முன்பு டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் - உளவுத் துறை எச்சரிக்கை

0 2277

சுதந்திர தினத்திற்கு முன்பு ஆள் இல்லா விமானம் மூலம் டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளதாக உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 5ந்தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது. அந்த நாளில் டெல்லியில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனிடையே, உத்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட அல் கொய்தா இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள், சுதந்திர தினத்தினை முன்னிட்டு பெரிய அளவில் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments