தமிழகத்திற்கு மேலும் 5 லட்சம் கோவிஷில்டு தடுப்பூசிகள் வந்தன

0 2971

த்திய தொகுப்பில் இருந்து மேலும் 5 லட்சம் கோவிஷில்டு தடுப்பூசி டோஸ், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கிற்கு வந்தடைந்தது.

தேவைக்கு ஏற்ப அனைத்து மாவட்டங்களுக்கும்  இரவிலேயே பிரித்து அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போதுவரை மொத்தமாக ஒரு கோடியே 85 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன.  ஜூலை 19 ஆம் தேதி வரை ஒரு கோடியே 82 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

ஜூலை மாதத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்த நிலையில் இதுவரை மொத்தம் 32 லட்சத்து 45 ஆயீரம் தடுப்பூசிகள் வந்துள்ளன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments