வெளி நபர்கள் ரேஷன் கடைக்குள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை - கூட்டுறவுத் துறை எச்சரிக்கை
ரேஷன் கடை ஊழியர்களைத் தவிர வெளி நபர்கள் யாரும் ரேஷன் கடைக்குள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை எச்சரித்துள்ளது.
மேலும் வெளி நபர்களுக்குத் துணை போகும் ரேஷன் கடை ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நியாய விலைக் கடையில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஊழியர்களை அருகில் உள்ள வேறு கடைகளுக்குப் பணியிட மாற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments