4 மாவட்ட கல்லூரிகள் அண்ணாமலை பல்கலை.யுடன் இணைப்பு பல்கலைக்கழகமாக மாற்றப்படும் - அமைச்சர் பொன்முடி
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைத்து, இணைப்பு பல்கலைக்கழகமாக மாற்றப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதன் மூலம் பல்கலைக்கழகம் சிறப்பாக செயல்பட வழி ஏற்படும் என்று கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் மட்டுமே நியமிக்கப்பட்டதகாகவும், பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு நிதி மற்றும் நியமனங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பொன்முடி தெரிவித்தார்.
Comments