பெரிய மைதானம் அளவிலான குறுங்கோள் ஒன்று வரும் 24 ஆம் தேதி பூமியை கடந்து செல்லும் - நாசா
பெரிய மைதானம் போன்ற அளவிலான குறுங்கோள் ஒன்று வரும் 24ஆம் தேதி பூமியை கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது.
2008 GO20 என்று பெயரிடப்பட்ட இந்த குறுங்கோள் பூமியை நோக்கி மணிக்கு 18 ஆயிரம் மைல் வேகத்தில் வந்தாலும், நாம் பயப்படத் தேவையில்லை எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமிக்கு அருகே இது கடந்து செல்லும் என்றாலும், அப்போது பூமிக்கும் இந்த குறுங்கோளுக்கும் இடையேயான தூரம் 37 லட்சத்து 18 ஆயிரத்து 232 மைல்களாக இருக்கும்.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயான தூரம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 606 மைல்கள் எனும் போது இந்த குறுங்கோள் கடந்து செல்லும் தூரத்தை எளிதாக புரிந்து கொள்ளலாம்.
இது வரை சுமார் 11 லட்சம் குறுங்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறுங்கோள்கள் பூமியை மோதும் அளவுக்கு நெருங்கினால் அவற்றை திசை திருப்ப பெரிய ராக்கெட்டுகளை விடலாம் என சீன ஆராய்ச்சியாளர்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Comments