ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

0 2788
ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம், செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ரேசன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம், செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் இதனை தெரிவித்தார்.

நாட்டில் தற்போது வரை 92.8 சதவீத ரேசன் கார்டுகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடப்பு நிதியாண்டில் ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி தமிழகத்திற்கு 1,169 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments