தன்னுடைய ட்விட்டர் கணக்கு தவறாக பயன்படுத்தக்கூடிய ஆபத்து உள்ளது - டிஜிபி அலுவலகத்தில் குஷ்பூ புகார்

0 4053

னது ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூறி நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பூ, டி.ஜி.பி. சைலேந்திர பாபுவிடம் புகாரளித்துள்ளார்.

சுமார் 13லட்சம் பேர் பின் தொடரும் குஷ்பூவின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்துள்ள மர்ம நபர்கள், அதில் பெயர் மற்றும் Profile படங்களை மாற்றியதோடு, இதற்கு முன் பதிவிட்டிருந்த பதிவுகளையும் அழித்துள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து டி.ஜி.பி.சைலேந்திர பாபுவை நேரில் சந்தித்து புகாரளித்த நடிகை குஷ்பூ, செய்தியாளர்களை சந்திக்கையில், தன்னுடைய ட்விட்டர் கணக்கு தவறாக பயன்படுத்தக்கூடிய ஆபத்து உள்ளதால் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments