கோவேக்சினுக்கு விரைவில் WHO-ன் சர்வதேச அனுமதி கிடைக்கும்? - பாரத் பயோடெக்
கோவேக்சின் தடுப்பூசியை,அவசரகால பயன்பாட்டுக்கு பட்டியலிட, அதன் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் சமர்ப்பித்த விண்ணப்பத்தை உலக சுகாதார நிறுவனமான WHO பரிசீலித்து வருகிறது.
இந்த தடுப்பூசியின் சோதனை முடிவுகள் உள்ளிட்ட தரவுகளை கடந்த 6 ஆம் தேதி முதல் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ள WHO, தடுப்பூசிக்கு எப்போது அனுமதி வழங்கலாம் என்பது பற்றி இதுவரை தீர்மானிக்கவில்லை என தனது இணைய தளத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் தங்கள் ஆய்வக வசதிகளை WHO தணிக்கை செய்துள்ளதால், கோவேக்சினுக்கான அனுமதி தாமதமின்றி கிடைக்கும் என பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.
கோவேக்சினின் 3 ஆம் கட்ட சோதனை முடிவுகளில், அது அறிகுறிகளுடன் உள்ள கொரோனாவில் இருந்து 77 புள்ளி 6 சதவிகித பாதுகாப்பையும், டெல்டா மரபணு மாற்ற வைரசுக்கு எதிராக 65 புள்ளி 2 சதவிகித பாதுகாப்பையும் தருவது உறுதியானதாக பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.
Comments