தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு

0 2631

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் 5 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்த செய்திக் குறிப்பில், அடுத்த 2 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

22-ந் தேதி நீலகிரி, கோவையில் கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மிதமான மழையும், பெய்யக்கூடும். சென்னையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் வங்கக் கடல், அரபிக் கடல் பகுதிகளுக்கு 5 நாட்களுக்கும், தமிழக கடலோரம் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு நாளை முதல் நான்கு நாட்களுக்கும் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments