தொடரும் அமளி - அவைகள் ஒத்திவைப்பு
இந்தியாவில் அரசியல் தலைவர்கள் பெகாசஸ் மென்பொருளால் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படுவதை எழுப்பி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இரண்டாவது நாளாகவும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. மக்களவையில் புதிய அமைச்சர்களை பிரதமர் மோடி அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த போது, பெகாசஸ் உளவு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
அவைத் தலைவருக்கு முன்னர் பதாகைகளுடன் அவர்கள் திரண்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு பல முறை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதே காரணத்தால் மாநிலங்களவையும் நாள் முழுதும் ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாம் நாளான இன்று, இரு அவைகளும் கூடியதும் எதிர்க்கட்சிகள் பெகாசஸ், கொரோனா நிலவரம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்பினர்.
மாநிலங்களவையும் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், பெகாசஸ் குறித்து ஐ.டி. அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments