உணவுப் பொருள் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி ?

0 5011
உணவுப் பொருள் கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி ?

உணவுப் பொருட்களில் உள்ள கலப்படங்களை கண்டறிய தனித்தனி வழிமுறைகள் உள்ளன. 

சென்னை எழும்பூரில் சாலையோர உணவு வியாபாரிகளுக்கான உணவுப் பாதுகாப்புப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உணவுப் பாதுகாப்பு நிபுணர் பசுபதி, உணவுப் பாதுகாப்பு குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 25 கோடி மக்கள், சாலையோர கடைகளில் ஒரு வேளையாவது உணவை உட்கொள்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

அத்தகைய சாலையோர உணவுகளைத் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருட்களில் பல கலப்படம் கொண்டவை என்பதை அறியாமல் அவற்றை வாங்கி வாடிக்கையாளர்களுக்கும் கொடுக்கின்றனர் என்கிறார் பசுபதி.

எனவே மூலப் பொருட்களை வாங்கும்போது, அவை தரமானவையா, தரமில்லாதவையா என்பதைக் கண்டறிய சில எளிமையான வழிமுறைகளையும் பசுபதி விளக்கினார்.நல்ல முட்டைகள் எது என்பதை கண்டறியும் வழிமுறைகளையும் அவர் எடுத்துரைத்தார்.

இதேபோல் மிளகு, மஞ்சள், மிளகாய்த்தூள், டீத்தூள், வெல்லம் உள்ளிட்டவற்றில் உள்ள கலப்படங்களையும் எவ்வாறு கண்டறியலாம் என்பதையும் பசுபதி எளிமையான வழிமுறைகளைக் கூறி விளக்கினார்.

ஒரு கண்ணாடி டம்ளர் தண்ணீரில், சிறிதளவு மிளகை போடும் போது, தூய மிளகு டம்ளரின் அடியில் தேங்கும் என்றும் பப்பாளி விதையாகவும், கலப்படமாகவும் இருந்தால் நீரின் மேல் பகுதியில் மிளகு மிதக்கும் என்கிறார் பசுபதி.

 எளிய மக்களுக்கான வரப்பிரசாதமாக இருக்கும் சாலையோர உணவகங்களில் தரமான உணவுகளை வழங்க வியாபாரிகள் முன்வர வேண்டும் என்றும் அதற்கு மூலப் பொருட்களை வாங்கும்போது கவனமோடு செயல்பட வேண்டும் என்றும் உணவுப் பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments